கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம் - ஆசிரியர் மலர்

Latest

16/02/2024

கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்

 1199596

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் வங்கிகள் இணைந்து எடுத்துவருகின்றன.


இதன் ஒருபகுதியாக, சென்னையில் மாபெரும் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் இன்று (பிப்.15) நடைபெற உள்ளது.


கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம்.


இந்த முகாமில், அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459