மின் கட்டணம் - தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




21/02/2024

மின் கட்டணம் - தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

 7b1

தமிழகத்தில், 5,700க்கும் மேற்பட்ட உயர்நிலை, 8,100க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் லேப்கள் உள்ளன.


மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு, ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சிகள் போன்றவை, இந்த லேப்களில் தற்போது நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு இதுவரை இருந்த மின் கட்டணம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஹைடெக் லேப் வசதி இல்லாத போது வழங்கப்பட்ட மின் கட்டணத்தையே அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தலைமையாசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது:


மின் கட்டணத்தை உயர், மேல்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே செலுத்தி, அரசு நிதி ஒதுக்கியவுடன் அதில் இருந்து பெற்றுக்கொள்வோம். லேப் வருவதற்கு முன் ஒரு பள்ளிக்கு 3,000 - 5,000 ரூபாயாக இருந்த மின் கட்டணம் தற்போது 50,000 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து விட்டது.


ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக மின் கட்டணத்தை அரசு வழங்குகிறது. கடைசியாக ஒதுக்கிய நிதி பல ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளது. ஆனால் அப்பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.


அரசு பள்ளிக்கு ஆகும் மின்செலவை அரசே செலுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459