டிட்டோஜாக் சார்பில் சென்னையில் உண்ணாவிரத உரிமை மீட்புப்போராட்டம் - 19.02.2024 - ஆசிரியர் மலர்

Latest

05/02/2024

டிட்டோஜாக் சார்பில் சென்னையில் உண்ணாவிரத உரிமை மீட்புப்போராட்டம் - 19.02.2024

 💥டிட்டோஜாக் சார்பில் சென்னையில் உண்ணாவிரத உரிமை மீட்புப்போராட்டம்:

       🔥டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243 ஐ ரத்துசெய்ய வலியுறுத்தியும்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாநில  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் 12.10.2023 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளுக்கும் ஆணை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் டிட்டோஜாக் பல கட்ட போராட்டங்களை அறிவித்திருக்கின்றது.

      💥அதில் பிப்ரவரி 19,20,21 தேதிகளில் மாவட்டத்தலைநகரில் தொடர்மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தது.இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு டிட்டோஜாக் சார்பில் GO 243 க்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களையும் அதில் உள்ள நியாயத்தையும் புரிந்துகொண்டு GO 243 ஐ ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஜாக்டோஜியோ கூட்டமைப்பு  ஏற்றுக்கொண்டு போராடுவதாக அறிவித்துள்ளது ஆகவே 19.2.2024,20.2.2024,21.2.2024 ஆகிய தேதிகளில் டிட்டோஜாக் சார்பில் நடைபெற இருந்த தொடர்மறியல் போராட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

      🔥19.2.2024 அன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் சென்னையில் உண்ணாவிரத உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற உள்ளது.இந்த போராட்டத்தில் பெரும்திரளாக கலந்துகொள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில,மாவட்ட,வட்டார பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்  தயாராகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.மாநிலம் முழுவதும் இருந்து

TEACHERS NEWS


சென்னை வர ரயில்,பேருந்து,கார்,வேன்  என தங்களுக்கு வசதியான ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

By வி.எஸ்.முத்துராமசாமி,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி & மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்,டிட்டோஜாக்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459