Income Tax வரிவிலக்கு வரம்பில் மாற்றம்... - ஆசிரியர் மலர்

Latest

12/01/2024

Income Tax வரிவிலக்கு வரம்பில் மாற்றம்...

 பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)


குறிப்பாக வழக்கம் போல, வரி செலுத்துவோர் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Elections) முன், வரி செலுத்துவோருக்கு, அரசு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையின்  (New Tax Regime) கீழ், தற்போதுள்ள வரி விலக்கு (Tax Exemption) ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படலாம். இந்த மாற்றத்திற்காக நிதி மசோதா கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் பணிகளுடன் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.


மத்திய அரசு (Central Government) இந்த முடிவை எடுத்தால், புதிய வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை வரி செலுத்துவோர் (Taxpayers) எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலக்கில் ரூ.50 ஆயிரத்திற்கான நிலையான விலக்கும் (Standard Deduction) அடங்கும். 2023 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக விலக்கு அளிக்கப்பட்டது.



நிலையான விலக்கு 



2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய வரி முறைமையில் பல மாற்றங்களைச் செய்து அரசாங்கம் நிவாரணம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இதற்கு முன்னர் புதிய வரி முறைமையில் முதலீடு அல்லது விலக்குக்கான உரிமை கோர முடியாது. ஆனால் பட்ஜெட்டில் அதில் நிலையான விலக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வரி செலுத்துவோருக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு (Tax Deduction) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) இந்த முறையின் கீழ் ரூ.15,000 வரை வரித் தள்ளுபடி (Tax Rebate) வழங்கப்படுகிறது



இது தவிர, புதிய முறையின் வருமான வரி அடுக்குகளிலும் (Income Tax Slabs) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், அடிப்படை விலக்கு வரம்பு முந்தைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

ஐடிஆர் தாக்கலில் சாதனை


2023-24 மதிப்பீட்டு ஆண்டில் டிசம்பர் 31 வரை 8.18 கோடி வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2022-23ல் இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7.51 கோடி ஐடிஆர்களை விட 9 சதவீதம் அதிகம்.




வரி வசூலை அதிகரிக்க அரசு இதை பற்றி பல விதங்களில் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில்,வரி வருவாய் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது, இது பட்ஜெட் மதிப்பீட்டை விட நேரடி வரிகளில் (Direct Taxes) 10.5 சதவீதமும், மறைமுக வரிகளில் (Indirect Taxes) 10.45 சதவீதமும் அதிகமாகும். மேலும் வரி விலக்கு (Tax Relief) குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459