அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துரு பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வியில் 2019 ஜனவரி 1-ம் தேதி முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு அதே ஆண்டு நவம்பர் 11-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது . இதில் தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டது.
அதன்பின் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் கூடுதல் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 2021 டிசம்பர் 31-ம் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகள்: இவர்களை பணிவரன்முறை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து 2021 டிசம்பர் 31-ல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துருவை தயார் செய்து அனுப்ப வேண்டும்.கருத்துருவை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, தனது கையொப்பமிட்ட பிரதியை பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் எவர் பெயரும் விடுபடக்கூடாது.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment