எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

10/01/2024

எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 


1181528

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் இன்று (ஜனவரி 10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.


இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது.


இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன. 10) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459