கர்நாடகத்தில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்காத என்று அவர்கள் அஞ்சினர். இதையடுத்து 2006-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு நேற்று, 2006-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு 13 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நாங்கள் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்த திட்டத்தால் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் நிம்மதி அடையும் என்று நம்புகிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment