பழைய ஓய்வூதிய திட்டம் அமலானால் என்னவாகும் ? ரிசர்வ் வங்கி விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

13/12/2023

பழைய ஓய்வூதிய திட்டம் அமலானால் என்னவாகும் ? ரிசர்வ் வங்கி விளக்கம்

 பழைய ஓய்வூதிய திட்டம் அமலானால் என்னவாகும் ? ரிசர்வ் வங்கி விளக்கம் :

Video News👇

Click here


மாநிலங்களின் நிதி நிலை குறித்து விரிவான ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பழைய ஓய்வூதிய திட்ட நடைமுறைக்கு திரும்பினால் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதிய திட்டத்தால் அரசுகளின் செலவுகள் 4.5 மடங்கு அதிகரிக்கும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 0.9 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகம் பயன்தராத மானியச் செலவுகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


மாநில அரசுகள் தத்தமது சொந்த வருவாயை பெருக்கிக் கொள்ள தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இதற்காக பல்வேறு கட்டணங்களை கூட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு அதிக நிதி பங்களிப்பை தர 16ஆவது நிதிக்குழு முன்வரலாம் என்றும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.


தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459