திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மனியம் பெ. சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தனி சிறப்பு தேர்வு முடிவின் மறுமதிப்பீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி விடைத்தாள் நகல் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் வருகிற 16ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான மறுமதிப்பீடு படிவங்கள் wwww.msuniv.ac.in என்ற இணைய முகவரியில் கிடைக்கும். இந்த முகவரிக்கு சென்று மறுமதிப்பீடு செய்ய விருப்பம் உடையோர் அதற்குரிய படிவங்களை நிரப்பி பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவானர் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல், விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ-ஐ 6-12-2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
தனி சிறப்பு தேர்வு முடிவுகள் 23-11-2023 அன்று வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment