பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

08/12/2023

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

1164817

பொறியியல் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட பருவத் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் டிசம்பர் 4-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.


இதற்கிடையே மிக்ஜாம் புயலின் பாதிப்பையொட்டி கல்லூரிகளுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த வாரம் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்வுக் கால அட்டவணையில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


டிச.11 - பிப்.17 வரை: அதன்படி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் வரும் டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.17-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்கான புதிய தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் (https://aucoeexam.in/) வெளியிடப்பட்டுள்ளது.


கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459