கோட்டை முற்றுகை பேரணி:ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது - ஆசிரியர் மலர்

Latest

29/12/2023

கோட்டை முற்றுகை பேரணி:ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது சென்னை, டிச. 28: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டையை வியா முக்கிழமை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காவல் துறையின ரால் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படுத் துதல், இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் ஆகியவை உள்ளிட்ட வலியுறுத்தி பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் சிவா னந்தா சாலையில் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட் டம் வியாழக்கிழமை நடைபெற் றது. இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதை யடுத்து அங்கு அமைக்கப்பட் டிருந்த மேடையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பா னர்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.


இதைத் தொடர்ந்து 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ச.மயில்இரா. தாஸ், அன்பரசு, தியாகராஜன், வின்சென்ட், செல்வம் உள்ளிட் டோர் தலைமையில் தலைமைச் செயலகத்தை நோக்கிஅணிவ குத்தனர்.


"அங்கு தலைமைச் செயலர் சிவதாஸ் மீனாவை சந்தித்து நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டனர். அப்போது, முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்களது வேண்டு கோள் ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது.


இதைத்தொடர்ந்துகோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடு படுவதற்காக ஆசிரியர்கள்,


அரசு ஊழியர்கள் திரண்டு காவல் து றையினரின் தடுப்புகளை தன் ளிவிட்டுக் கொண்டு முன்னே றினர்; அதேவேளையில் அங்கு சாலையில் அமர்ந்து மறியலி சாலையில் முயன்றனர்.


இதனால் போராட்டக்காரர் களுக்கும், காவல்துறையினருக் கும் இடையே தள்ளுமுள்ளு மற் றும் கடும் வாக்குவதாதம் ஏற் பட்டது. இதனால் போராட்டத் தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை காவல் துறையி னர் கைது செய்து பேருந்தில் ஏற்றிச்சென்று எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர் கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஜன.7-இல் மீண்டும் கூட்டம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது

எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தராவிட்டால் ஜன.7-ஆம் தேதி மீண்டும் ஜாக்டோ ஜியோ மாநில உயர் நிலைக் குழுவை கூட்டி முடிவெடுத்து அடுத்த கட்ட போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459