தேசிய கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

09/12/2023

தேசிய கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

 

இளம் சாதனையாளர்களுக்கான, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும், 30 ஆயிரம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தமிழகத்தை சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு, 2023-24ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கப்படுகிறது. பெற்றோரது வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சம். வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2024 ஜன., 15க்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டும்.


இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டு பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் உள்ள லிங்க்-ல் சென்று, கடந்தாண்டு பெற்ற விண்ணப்ப எண், கடவு சொல் பதிவு செய்து, 2023-24ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். புதிதாக பதிவு செய்ய விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், எட்டு மற்றும் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர்.விபரங்களுக்கு, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளமான, http://socialjustice.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459