அரையாண்டு தேர்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிக்கை - ஆசிரியர் மலர்

Latest

06/12/2023

அரையாண்டு தேர்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிக்கை

 1163901

.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வு நடப்பு கல்வியாண்டு முதல்மாநில அளவில் ஒரே வினாத்தாள்அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை கடந்தமாதம் வெளியிட்டது. அட்டவணைப்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு டிசம்பர் 7 முதல் 22-ம்தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்புக்கு டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


இந்நிலையில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது . மழையால் பாதிக்கப்பட்ட சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.


 இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது .

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459