கனமழை வெள்ளம்: 400 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

20/12/2023

கனமழை வெள்ளம்: 400 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்கள்


கனமழை ,கொரோனா போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் துயரங்களில்  மக்களை காப்பாற்றும் பணியில் ஆசிரியர்கள் பலர்  சிறப்பாக ஈடுபடுகின்றனர். 
கடந்த கொரோனா காலங்களிலும் தற்போதைய கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால்  மக்களை காக்கும் பணியிலும் தன்னுயிர் கருதாது செயல்படுகின்றனர். ஆசிரியர்களுக்குரிய உயரிய பண்பை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
ஆசிரியர் இயக்கங்கள் தங்களது தேவைக்காக மட்டும் போராடுபவர்கள் அல்ல என்பதனை இந்த செய்திகள் மூலம் அறியலாம்.
மக்களை காப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றிற்காக சங்கத்தின் மாவட்ட செயற்குழுவை Google meet வழியாக கூட்டி முடிவு செய்து மக்களை காக்கும் கேடயமாக ஆசிரியர் இயக்கம் செயல்படுவது பாராட்டுக்குரியது.
மக்கள் நலன் கருதி செயல்படும் இது போன்ற ஆசிரியர் இயக்கங்கள் தங்கள் நலன் கருதி  அரசுக்கு கோரிக்கை வைக்க தார்மீக உரிமை உள்ளது.அதை அரசு நிறைவேற்றவேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

________________________________________


செய்திகளின் தொகுப்பு 

________________________________________


1) மீட்புப்பணி நாயகனுக்கு வாழ்த்துகள்

💐💐💐💐💐💐💐💐

வரலாறு காணாத மழை...


தத்தளிக்கின்றன...

4 மாவட்டங்கள்

இப்படியும் நடக்குமா...

என எண்ணும் அளவிற்கு இடர்பாடுகள்...

உறங்கும் நேரத்தில்...


தங்கள் உடைமைகளை இழந்து நிர்க்கதியாக...

வாழ்வின் விளிம்பில் நின்ற மக்களின்...

விலைமதிப்பற்ற...

உயிரைக் காப்பாற்றும் மீட்புப் பணியை...

எங்கள் உணர்வுகளை எல்லாம் ஒருசேரப்பெற்று...

தலைமையேற்று நடத்தி...


நானூறு உயிர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ள...

TNPTF கருங்குளம் வட்டாரச் செயலாளர்

ஆற்றல்மிக்க தோழர்

பி.லூயிஸ் பூ.ராயன்


அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக்கிளை சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அருகே நெருங்கவே அஞ்சிய கொரோனா காலத்திலேயே...


என் மக்களை நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார் என தொட்டுத்தூக்கி களப்பணியாற்றிய தோழனே...

நட்டநடு ராத்திரியில் நீ நடுவெள்ளத்தில் சிக்கிக் கொண்டேனென்ற போது...

பதைபதைத்து உயிர் துடித்து...


நாம் தப்பித்தால்தான் நாலுபேரைக் காப்பாத்தலாம் நம்பிக்கையோடு கரைசேர் என்று நாதழுதழுக்கக் கூறினேன்...


இன்று ஆர்ப்பரிக்கும் மழைவெள்ளத்தில் வள்ளம் கொண்டு...

400 உயிர்களைக் காப்பாற்றியுள்ளாய்...

நெஞ்சம் நெகிழ்கிறது...


TNPTF தலைவணங்குகிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வாழ்த்துகளுடன்...

மாவட்ட மையம்

TNPTF தூத்துக்குடி.

________________________________________

2)தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஒன்றியம் புன்னக்காயல் கிராமத்திற்கு முதல் கட்டமாக ரூ 50000/ மதிப்புள்ள உணவுப்பொருட்களை மணப்பாடு கிராமத்திலிருந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக்கிளை சார்பாக  கடல்வழியாக படகில் அனுப்பப்படுகிறது ( மாவட்ட மையம் TNPTF தூத்துக்குடி)

_________________________________________



3)TNPTF ன் இரண்டாம் கட்ட வெள்ளநிவாரணப்பணி : இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி சார்பாக   பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வழங்க ரூ 100000/ மதிப்பிலான நிவாரணப்பொருட்களுடன் வாகனம் செல்கிறது( மாவட்ட மையம் TNPTF தூத்துக்குடி)


________________________________________








4)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


தூத்துக்குடி  மாவட்டம்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

இணைய வழி மாவட்டச்  செயற்குழுக் கூட்ட அழைப்பு


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


நாள் : 19.12.2023

செவ்வாய்க்கிழமை

மாலை 5.00மணி.


 தலைமை:

மா.கலை உடையார்

மாவட்டத்  தலைவர்


முன்னிலை:

தே.அன்டணி சார்லஸ்

மாநிலச் செயற்குழு உறுப்பினர்

சா.ஆனந்தி

*மாநிலச் செயற்குழு உறுப்பினர்*


*வரவேற்புரை*: 

 சு.செல்வராஜ்

 *மாவட்டச்  செயலாளர்*


*சிறப்பு அழைப்பாளர்*

ச.மயில்

*மாநிலப் பொதுச்செயலாளர்*


*கூட்டப்பொருள்:*

*நமது மாவட்டத்தில் பெய்துள்ள வரலாறு காணாத மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி செய்வதற்காக நிதி திரட்டுதல்.*


*நன்றியுரை*

கோ..ஜெயசீலி

*மாவட்டப்  பொருளாளர்*


*குறிப்பபு:*

*தோழர்கள் Google Meet செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு குறித்த நேரத்தில் கூட்டத்தில் இணைய வேண்டுமென  அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்திற்கான லிங்க் பின்னர் நமது மாவட்டக் குழுவில் பகிரப்படும்.*

தோழமையுன் அழைக்கும்.........

 சு.செல்வராஜ்

*மாவட்டச் செயலாளர்*

*TNPTF தூத்துக்குடி.*

________________________________________

5)

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459