1. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த் திருவிழாவினை முன்னிட்டு டிச.26 (செவ்வாய்க்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
26.12.2023 அன்று அறிவிக்கப்பட்டு உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மூன்றாவது சனிக்கிழமை (20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 26.12.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2. ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு டிஸம்பர் 26ம் தேதி செவ்வாய்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜன.6 ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 6ம் தேதி அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், டிச.26ம் தேதி செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment