அரசு தொழில்நுட்ப கல்வி துறை சார்பில், 2024 பிப்., மாதம் நடைபெறவுள்ள வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், நேற்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், நேற்று முதல், 2024 ஜன., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன., 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, வாய்ப்பு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள்,விண்ணப்ப கட்டணம் 30 ரூபாய், இளநிலை 100 ரூபாய், இடைநிலை 120 ரூபாய், முதுநிலை 130 ரூபாய், உயர்வேகம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment