பெங்களூரு: கர்நாடகாவில், பொறியியல், ஆர்கிடெக்சர், பி.எஸ்சி., விவசாயம், பி.எஸ்சி., தோட்டக்கலை, ஹோமியேபதி, விவசாய பயோ தொழில்நுட்பம், பி.டெக்., - பி.பார்ம்., - டி.பார்ம் உட்பட உயர் படிப்புகளுக்கு, 1999 முதல் சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படிப்பவர்கள், விண்ணப்பிக்கலாம்.
இந்த வகையில், 2024ல் நடக்க கூடிய சி.இ.டி., தேர்வு தேதியை, கர்நாடகா தேர்வு ஆணையம் நேற்று அறிவித்தது.
இதன்படி, 2024 ஏப்ரல் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு உயிரியியல்; மதியம் 2:30 மணிக்கு கணிதம்; 21ம் தேதி காலை 10:30 மணிக்கு இயற்பியல்; மதியம் 2:30 மணிக்கு ரசாயனம் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 60 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கும். மேலும், வெளி மாநிலம், வெளிநாடு மாணவர்களுக்கு, ஏப்ரல் 19ம் தேதி, கன்னட மொழி தேர்வு நடத்தப்பட உள்ளது.
சி.இ.டி., தேர்வுக்கு 2024 ஜனவரி 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment