உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET சம்பந்தமான வழக்கு நேற்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு
TEACHERS NEWS |
*அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் வாதாடினார்கள்.*
*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை வழங்குவதாக விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*
*தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு
பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*
*இந்த வழக்கில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய திடமிட்டு இருக்கிறோம்.*
*எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*
*மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் தான் . என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*
*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
< ( = window. || []).push({});
No comments:
Post a Comment