கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

11/11/2023

கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை

 சென்னை: சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த மாணவர்கள், சக மாணவரை ராகிங்செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ராகிங் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது அண்ணாபல்கலைக்கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் ராகிங் சம்பவத்தை தடுக்கஅந்தந்த கல்லூரி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

அதிலும் குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதிகளில் ராகிங் செய்யப்படுகிறார்களா? என கண்காணித்து அவ்வாறு ராகிங்கில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ராகிங் தடுப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459