TRB - CMRF தகுதித் தேர்வு அறிவிப்பு 2023 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/10/2023

TRB - CMRF தகுதித் தேர்வு அறிவிப்பு 2023 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!


 தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் உதவித்தொகை (CMRF) தகுதித் தேர்வுக்கு தகுதியான தமிழக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 15.11.2023, மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



TN TRB விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை:

கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் – 60

அறிவியல் – 60

என மொத்தம் 120 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


CMRF தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் / பதிவுக் கட்டணம் கிடையாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.


CMRF திட்டத்திற்கான தகுதிகள்:

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.ஜி. இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களும் CMRF தகுதித் தேர்வுக்குத் விண்ணப்பிக்கலாம்.

SC / SCA / ST / மாற்றுத் திறனாளிகள் / பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் மற்றும் மற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது


நிறுவனத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு, மேல்நிலை / டிப்ளமோ, S.S.L.C. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல் முறை:

இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC / SCA / ST / மாற்றுத் திறனாளிகள் / பெண்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 45% மற்றும் மற்றவர்களுக்கு 50%. CMRF தகுதித் தேர்வில் தரவரிசை மற்றும் CMRF திட்டத்திற்கான விதிமுறைகளின் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் https://www.trb.tn.gov.in. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: வேறு எந்த பயன்பாட்டு முறையும் ஏற்றுக் கொள்ளப்படாது.


Chief Minister Research Fellowship (CMRF) Eligibility Test for the year 2023 – 2024 - Download here


16-10-2023 - NOTIFICATION- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) ELIGIBILITY TEST FOR THE YEAR 2023 - 2024 - Download here


16-10-2023 - SYLLABUS- CMRF Eligibility Test - Download here


Download Notification 2023 Pdf 

Apply Online

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459