TNEB JOB NEWS: தமிழ்நாடு மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/10/2023

TNEB JOB NEWS: தமிழ்நாடு மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 55,000-ஆக அதிகரிப்பு

 

electricity_edi.jpg?w=400&dpr=3

தமிழக மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,000-ஆக அதிகரித்துள்ளது.


தமிழக மின் வாரியத்தில் உதவி பொறியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட 1.44 லட்சம் பணியிடங்களில் நிகழாண்டு மாா்ச் நிலவரப்படி 88,774 போ் பணியாற்றி வருகின்றனா். இதனால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 55,226-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2,001 பணியாளா்கள் ஓய்வு பெற்றுள்ளனா்.


அதிக காலிப் பணியிடங்களால் மின் வாரியத்தில பல்வேறு பணிகள் தாமதமாகின்றன . இதனால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின் வாரியத்துக்கு ஊழியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தாமல், முதல்கட்டமாக 5,000 நிரந்தர ஊழியா்களை உடனே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459