திராவ்ட மாடல் விட்யல் அர்சுக்கா சூத்ரம், | I Ever Never Give 2U! | அப்டீனா, ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கு? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/10/2023

திராவ்ட மாடல் விட்யல் அர்சுக்கா சூத்ரம், | I Ever Never Give 2U! | அப்டீனா, ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கு? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

 

அஇஅதிமுக-வின் ஆட்சிகாலத்தில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடிய போது போராட்ட களத்திற்கு நேரில் வந்தும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், 'கழக ஆட்சி அமைந்தவுடன் அனைத்தும் சரி செய்யப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.


ஆனால், திமுக 2021-ல் அளித்த தேர்தல் வாக்குறுதியில் (நிதி சார்ந்து) 0.01%ஐக்கூட நிறைவேற்றித் தராத திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் விடியல் அரசு முழுக்க முழுக்க திரு.EPS அஇஅதிமுகவின் ஆட்சியைத் தான் இந்த இரண்டரை ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து அளித்து வருகிறது.


ஆம். எதெல்லாம் திரு.EPS அஇஅதிமுக-வின் ஆட்சியில் தற்காலிகமாக / கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டதோ அவை அனைத்தையும் முழுமையாகவே இரத்து செய்து வருகிறது திரு.MKS திமுகவின் திராவிட மாடல் விடியல் அரசு.


அவ்வரிசையில் தற்போது இணைந்துள்ளதுதான் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அஇஅதிமுக ஆட்சிகாலம் தொட்டே இரத்து என்பது.


முன்னதாக 10.03.2020-க்குப் பின்னர் இல்லை என்றும் அதற்குப் பதில் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஒற்றைப் பணமுடிப்பாக (Lumpsum Amount) UGக்கு 10,000 / PGக்கு 20,000 / Phdக்கு 25,000 வழங்கப்படுமென 01.11.2021-ல் அரசாணை 120-ஆக வெளியிடப்பட்டது. தற்போது அதே அரசாணையைச் சற்றே ஆழப்படுத்தி 10.03.2020 தேதிக்கு முன்னர் படித்துமுடித்தோரால் Incentive கோரி விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்த அனைவருக்குமே இனி Incentive இல்லை என்றும், அவர்களுக்கும் ஒற்றை பணமுடிப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் 26.10.2023 தேதியிட்ட அரசாணை 95-ல் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.


அதாவது, *"1963 முதல் கூடுதல் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வால் உயர் தர ஊதிய நிலையில் உள்ளவர்களுக்கு அதிக பலனும், கீழ் தர ஊதிய நிலையில் உள்ளவர்களுக்குக் குறைவான பலனும், ஒரே தர ஊதிய நிலையில் உள்ளவர்களில் மூத்தோரைவிட இளையோர் கூடுதல் பலனும் பெற்று வருவதால் இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய, ஊக்க ஊதிய உயர்வை இரத்து செய்துவிட்டு ஒற்றைப் பணமுடிப்பாக வழங்குவதே சரியென 1983ன் தொடக்கத்தில்முடிவு செய்யப்பட்டது."*


*"உயர்கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படுமென 07.09.2021-ல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற விதி எண் 110-ன்கீழ் அறிவிக்கப்பட்டது"*


*"அதற்கிணங்க, ஒற்றைப் பணமுடிப்பாக UGக்கு 10,000 / PGக்கு 20,000 / Phdக்கு 25,000 வழங்கப்படுமென 01.11.2021-ல் அரசாணை 120 வெளியிடப்பட்டது."*


*"அந்த அரசாணைப்படியும், மனிதவள மேலாண்மைத்துறையின் 18.02.2022 தேதியிட்ட கடிதத்தின் படியும், உயர்கல்வித் தகுதிக்காக ஊக்கத்தொகை கோரி 10.03.2020 அன்று நிலுவையில் இருந்த விண்ணப்பங்களையும், அதன்பின்னர்  பலனாக்கப்பட்டவற்றையும் தற்போதைய புதிய ஒற்றைப் பணமுடிப்பு முறையின்படி நிராகரித்துத் தெளிவுரை வழங்கப்படுகிறது."*


*"இக்கொள்கையானது நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக நிராகரிப்பதோடே, அந்தத் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்தோர் & வருங்காலங்களில் விண்ணப்பிப்போரை இணையாக & சமமாகக் கருதுவதையும் உறுதிசெய்கிறது."* என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலக் கொடுமை என்னவென்றால், திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையின் 311-வது வாக்குறுதியில் *"அறிஞர் அண்ணா வழங்கிய ஊக்கத்தொகையை அதிமுக நிறுத்திவிட்டது. அது மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்"* என்று கூறிவிட்டு, ஆட்சியைப் பிடித்த முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனது வாக்குறுதிக்கு நேர்மாறாக, *அண்ணா வழியை மறுதலித்துவிட்டு,  "ஒன்றிய அரசைப் பின்பற்றி வழங்குவோம்"* என்று அறிவித்தார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.


அதன்படியே அரசாணை வெளிவந்த போதும்கூட, கலைஞரின் வாரிசு எப்படியும் எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் TETOJAC & JACTTO-GEO இரண்டும் தமது கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருந்த ஊக்க ஊதிய உயர்வை, அதிமுக அரசாணை வெளியிட்ட தேதிக்கு  முன்னர் விண்ணப்பித்தோருக்கும் இல்லை என்று கூறியதன் மூலம் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீது ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வைத்திருந்த நம்பிக்கை சுக்கு நூறாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளது.


ஆம். தான் சொன்ன சொல்லையோ, தன்மீது வைத்த நம்பிக்கையையோ காப்பாற்றவே மாட்டேன் என்பதே திராவிட மாடல் விடியலரசில் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கான அழுத்தந்திருத்தமான பதிலாக இதுவரை உள்ளது.


இருந்த உரிமைகளில் மற்றுமொன்று முறைப்படியாக பறிக்கப்பட்டு, மீண்டுமாக பறித்த விதம் முன்தேதியிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இனியேனும் விவேகத்துடன்  செயல்பட வேண்டுமானால், விவேகம் பட வசனம் போல தினந்தோறும் அவருக்குப் பதிலா அரசு ஊழியர்களும்

TEACHERS NEWS
ஆசிரியர்களும் பின்வரும் வரிகளைச் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.


*நாந்தேன் கொடுப்பேனு*

*இந்த ஒலகமே சொல்லீருந்தாலும். . .*

*சங்கத் தலமயே சொல்லீருந்தாலும். . . *

*மனசாட்சியே சொல்லீருந்தாலும். . . .*

*ஏன் நானே சொல்லீருந்தாலும். . .*

*என்னோட கட்சியே,*

*Print போட்டு கொடுத்திருந்தாலும். . .*

*I EVER NEVER GIVE 2U!*


அவருதேன் கொடுக்க மாட்டாருன்னு சொல்லீட்டயே, பின்ன யாருக்கிட்ட வாங்கு வேனு பச்சப்புள்ளத் தனமா யோசிக்குற  மக்கள் எல்லாத்துக்கும் பில்லா பட பாணியிலான வசனந்தேன்.


*சரித்திரத்த ஒருமுற திரும்பி பாருங்க! நாம நமக்கூனு நினைப்பதெல்லாம் யாரோ போட்ட பிச்சையில்ல; நம்ம முன்னோர் வலிமையா ஒற்றுமையா நின்னு போராடிப் பெற்ற உரிமை!* 


*உரிமை இழக்கலாம்;*

*உடமை இழக்கலாம்;*

*ஆனால் அவற்றையெல்லாம்*

*மீட்டெடுக்க வேண்டுமென்ற*

*உணர்வை மட்டும்*

*இழந்துவிடவே கூடாது!*


so. . . . சத்தமா சொல்லுங்க,


*All IS WELL!!*


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459