அகவிலைப்படி கோரிக்கை அரசுக்கு நெருக்கடி - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/10/2023

அகவிலைப்படி கோரிக்கை அரசுக்கு நெருக்கடி

 Tamil_News_large_3464932

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் வெளியிட்ட அறிக்கை:


மத்திய அரசு ஊழியர் களுக்கும், ஆசிரியர்களுக்கும், 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிட்டு உடனடியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கனவே நிதி பற்றாக்குறை, காலியிடம் நிரப்புவதில் தாமதம், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை போன்றவற்றுக்கு இடையே, அகவிலைப்படி உயர்வு கோரிக்கையும், தமிழக அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459