சோதனை: பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்- - ஆசிரியர் மலர்

Latest

20/10/2023

சோதனை: பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்-

 1576943-emergency


தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.


''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.


சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.


பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு


சேவை வழங்குனரிடமும் ''செல் ஒலிபரப்பு எச்சரிக்கை'' அமைப்பின் சோதனையை இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்த உள்ளது.


மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459