அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/10/2023

அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

 சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு:


ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர் - வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.


● 2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்



● சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்


● தேசிய விளையாட்டு போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்


● இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.


விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து,

TEACHERS NEWS
வரும், ௩1ம் தேதிக்குள் இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.


இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459