அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/10/2023

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன ?

 .com/

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் , அவர் நிறைவேற்றுவதாக உறுதியளித்த கோரிக்கைகளின் விவரங்களை ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன . 


அதன் விவரம் வருமாறு : 


* இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .


அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை மூவர் குழுவிற்கு பரிந்துரை செய்து தீர்வு காணுதல் , 

* எமிஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து , ஆசிரியர்கள் , மாணவர்கள் வருகைப்பதிவு தவிர , பிற அனைத்து வகையான பதிவேற்றப் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் செய்யப்படும் . 

* 2019 - ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை முதல் தகவல் அறிக்கை 586 பேருக்கு நிலுவையில் உள்ளது . இதனால் வெளிநாடு அனுமதி , விருப்பப் பணித்துறப்பு கோருபவர்கள் பாதிக்கப்படுகின்ற னர் . அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . 

* தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரூ .5,400 தர ஊதியம் பெற்றவர்களின் தணிக்கைத்தடை முற்றிலும் நீக்கப்படும் . அவர்களே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் . நேர்வில் அதன் தரஊதியம் தொடர ஆணை பெறப்படும் . 

* பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் , பதவி உயர்வு பணிமூப்பின் அடிப்படையிலேயே வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும் . விரைந்து தீர்வுகாண தனிக்கவனம் செலுத்தப்படும் . நடந்த பேச்சுவார்த்தை என்பது ஆசிரியர்களுக்கு தொடர்பாகவும் , அமைச்சர் மகிழ்ச்சியான நிறைவேற்றுவதாக அறிவித்த அடுத்த மாதம் ( நவம்பர் ) .யில் இருந்து அகை விடுவிக்கப்படுவார்கள் . 

* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் கிடையாது . 

* பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ( எஸ்.எம்.சி. ) ஆண்டிற்கு 4 முறை கூட்டினால் போதும் . 

* உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும் . 

* உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகால ஊதிய உயர்வின்றி ' என்ப்ரீ பே ' மட்டுமே பெற்றுவரும் ஆசிரியர்கள் 1,500 பேருக்கு நியமனம் முதல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல் , 

* பி.லிட் . முடித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் , அதன் பின்னர் பி.எட் . படித்தால் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக் | கைத் தடைகள் நீக்க நடவடிக்கை . 

* 58 மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பள்ளித் துணை ஆய்வர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு , நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு பணி மாற்றம் அளிக்கப்படும் . 

* பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும் . 3 மாத காலத்திற்குள் மாற்று ஏற்பாடு

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459