கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.Join Telegram
அரசு பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று, அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment