எண்ணும் எழுத்து திட்டத்தை பள்ளிகளில் சர்வே செய்து மாற்றம் செய்ய முடிவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/09/2023

எண்ணும் எழுத்து திட்டத்தை பள்ளிகளில் சர்வே செய்து மாற்றம் செய்ய முடிவு!


.com/

எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிய, 132 பள்ளிகளில் சர்வே நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், புதிய பாடத்திட்டம் உருவாக்கி சொல்லி தரப்படுகிறது. இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சர்வே மேற்கொள்ளப்படுகிறது.


வட்டார வாரியாக பள்ளிகளை, 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் தலைமையில், பி.எட்., மாணவர்கள் ஈடுபடுத்தி சர்வே எடுக்கப்படுகிறது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 132 பள்ளிகளில், சர்வே எடுக்கும் பணிகள் நடக்கின்றன. வரும் 14ம் தேதி வரை, சர்வே தகவல்கள், செயலியில் பதிவேற்றப்படும். இத்தகவல்கள் அடிப்படையில், இரண்டாம் பருவ கற்பித்தல் முறைகள் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459