CPS யை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




09/07/2023

CPS யை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்


CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிளான ஆலோசனை கூட்டம் இன்று (8.7.23) திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மு. செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.


நடைபெற்ற வேலை தொடர்பான அறிக்கையை மாநில ஒருங்கிணைப்பாளர் சு. ஜெயராஜராஜேஸ்வரனும் நிதிநிலை அறிக்கையை நிதிக்காப்பாளர் C. ஜான் லியோ சமர்பித்தனர்.


CPS ஒழிப்பு இயக்கத்தின் கடந்துவந்த பாதை ஆவணத்தை வெளியிட்டு TNGEA மேனாள் மாநில தலைவர் M. சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.


த.நா.அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் த.பார்த்தசாரதி JSR தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் டே. குன்வர் ஜோஸ்வா வளவன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


Join Telegram


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.இ.கண்ணன் நிறைவுறையாற்றினார்.


திரு. சி.புனிதன் நன்றியுரை கூறினார்


நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் 


CPS யை ரத்து செய்யக்கோரி கீழ்கண்ட போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது


1. ஜூலை 10 முதல் ஆகஸ்டு 15 வரை


மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு


2.  24.8.23 அன்று


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்.


3.  12.9.23  முதல் சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரதம்.


4. அக்டோபர் -


திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு 


மாநில மையம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459