‘ஜிபாட்’ நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




03/07/2023

‘ஜிபாட்’ நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

 

1035307

முதுநிலை பார்மசி படிப்புக்கான `ஜிபாட்' நுழைவுத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.


நாட்டில் முதுநிலை பார்மசி படிப்புகளில் சேர ஜிபாட் என்ற பட்டதாரி பார்மசி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கணினி வழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான ஜிபாட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 221 மையங்களில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வெழுத 68,439 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 62,275 பட்டதாரிகள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.


இந்நிலையில் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை /gpat.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/ 011-4075 9000 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது gpat@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், மதிப்பெண் பட்டியல் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459