பி.எட்., நுழைவு தேர்வு தமிழகத்தில் அமல் - ஆசிரியர் மலர்

Latest

03/07/2023

பி.எட்., நுழைவு தேர்வு தமிழகத்தில் அமல்

 நான்காண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரு பல்கலை மட்டும் நுழைவு தேர்வில் இணைந்துள்ளது.


ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட்., ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கும், இந்த ஆண்டு முதல், என்.சி.இ.டி., என்ற தேசிய பொது நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.


இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, வரும், 19ம் தேதிக்குள், https://ncet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப் படவில்லை.


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட, 13 மொழிகளில், கணினி வழியில், நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், நாடு முழுதும், 42 கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன.


தமிழகத்தை பொறுத்தவரை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையில், ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., படிப்புக்கு, என்.சி.இ.டி., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே சேர்க்கை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459