மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், மாநில பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி, தமிழகத்தில் செயல்படும், 45 கே.வி., பள்ளிகளும், மற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தமிழ் மொழி பாடத்தை நடத்த துவங்கியுள்ளன.
இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறையில் தயாரிக்கப்பட்ட, தமிழ் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில்நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாரத்தில், மூன்று பாடவேளைகள் தமிழ் பாடம் நடத்தும் பணியை, பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment