ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அன்பில் மகேஸ் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

 




14/07/2023

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அன்பில் மகேஸ் பேட்டி

anbil_mahesh1.jpg?w=400&dpr=3

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

டெட் தேர்வு, போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை தொடர்பாக ஏறத்தாழ 20 மணிநேரம் சங்கத்தின் சார்பாக வந்தவர்களிடம் பேசினோம். ஒவ்வொருவரும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதில், நியாயமான கோரிக்கைகளும் உள்ளன. கருணை அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. மிக விரைவில் நிதித் துறை அமைச்சர், நிதித் துறைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலருடன் ஆசிரியர் சங்கங்கள் மூலமாக வந்த கோரிக்கைகள் குறித்து பேசவுள்ளோம். அதில், எந்தெந்த கோரிக்கைகள் உடனடியாக செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்யப் போகிறோம்.


தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, முதல் முறையாக ஒவ்வொரு பள்ளியிலும் 20 நிமிடங்கள் பள்ளி நூலகத்துக்கு மாணவர்கள் செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் விரும்புகிற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். இதன் மூலம், பள்ளி சார்ந்த தமிழ் மன்றங்கள், மற்ற மன்றங்கள் மூலமாக நடைபெறுகிற கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்குபெறவும், மாநில அளவில் பரிசு பெறும் வகையிலும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459