10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். - ஆசிரியர் மலர்

Latest

 




22/07/2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

IMG_20230722_105815

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற வேண்டிய விண்ணப்பம் குறைந்த குடும்ப வருமானம் பெற்று பத்தாம் வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் ) சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு . S.D. ஷிபுலால் , ( இன்போசிஸ் ) மற்றும் திருமதி.குமாரி ஷிபுலால் ( காப்பாளர் ) கட்டமைப்பு பெற்று வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.


 உதவிப்பணம் , இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் - 2023 இந்த உதவித்தொகை பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள் . 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் , 80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் , மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 % மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருத்தல் வேண்டும்.


 தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியான மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 15 , 2023 வரை விண்ணபிக்கலாம். மேலும் கேள்விகள் மற்றும் விவரங்களுக்கு , தமிழ் நாடு மாணவர்கள் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் , புதுச்சேரி மாணவர்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள் அல்லது 9663517131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் .

Vidhyadhan 

Scholarship instructions - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459