அரசு பள்ளி மாணவர் பல் பாதுகாப்பு திட்டம்: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

28/06/2023

அரசு பள்ளி மாணவர் பல் பாதுகாப்பு திட்டம்: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு


1029166

பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழக சுகாதாரத் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் ‘புன்னகை' எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகிறது.


Join Telegram


இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த விவகாரம் சார்ந்து சுகாதாரத் துறையின் மாவட்ட அலுவலர்கள் அணுகும்போது சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து புன்னகை திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பல் பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் மாணவர்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459