தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு இல்லை... வானிலை ஆய்வு மைய இயக்குனர் சொல்வது என்ன? - ஆசிரியர் மலர்

Latest

06/06/2023

தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு இல்லை... வானிலை ஆய்வு மைய இயக்குனர் சொல்வது என்ன?

 தமிழகத்தில் தற்போதைக்கு வெயில் குறைய வாய்ப்பு இல்லை என இந்திய ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 

தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். 

 

கடந்த காலங்களிலும் ஜூன் மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்ததாகவும், குறிப்பாக 2019-ல் 14 நாட்கள் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானதாகவும் பாலச்சந்திரன் கூறினார். 

 Join Telegram

இரண்டு நாட்களுக்கு பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள பாலச்சந்திரன் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். 


 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459