நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

12/06/2023

நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ!

 


இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி  நடைபெற்றது. சரியாக 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

 

உத்தேச விடைத்தொகுப்பு (Provisional Answer keys) தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் (Scanned Images of OMR Answer Sheet & Recorded Responses) விரைவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும். 

 

மேலும், OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் மதிப்பீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால், முகமைக்கு தேர்வர்கள் தெரியப்படுத்தலாம். ஒரு விடைக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்படி, விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வரின் OMR விடைத்தாள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459