ஜூன் 30-ல் மாணவர் சேர்க்கை நிறைவு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3-ல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




22/06/2023

ஜூன் 30-ல் மாணவர் சேர்க்கை நிறைவு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3-ல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.07 லட்சம் பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.


2023–24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே 8-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 2.46 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, மாணவர் சேர்க்கை மே 29-ம்தேதி தொடங்கியது.


Join Telegram


முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடந்தது. இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 31 ஆயிரத்து 488 இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.


தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.


ஏற்கெனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த உடன், ஜூன் 22-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், கல்லுாரி திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459