2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

06/06/2023

2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

 பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!

IMG_20230606_174011

Join Telegram


2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது .இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதி அன்றும் , 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். 

எனவே , மேற்கண்டுள்ள நாட்களில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459