ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குபேருந்துகளில் கட்டணம் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/05/2023

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குபேருந்துகளில் கட்டணம் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

 ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது, ஐந்து வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Join Telegram


இதற்கான உத்தரவை உள்துறை அண்மையில் வெளியிட்டது. அந்த உத்தரவில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட, 12 வயதுக்கு மிகாத குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணச்சீட்டு அளிக்கப்படும். ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.


அதேசமயம், நகரம் மற்றும் பெருநகர போக்குவரத்துப் பேருந்துகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459