பி.இ., படிப்புக்கு செல்வதை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

17/05/2023

பி.இ., படிப்புக்கு செல்வதை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்

 இன்ஜினியரிங் படிப்பதை விட, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் படிக்க மாணவ, மாணவிகள் அதிகளவு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tngasa.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,96,226 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,44,240 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், 19,624 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 19ம் தேதி.


இதேபோல், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1,29,192 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 79,890 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும், 41,552 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், இன்ஜினியரிங் விண்ணப்ப பதிவை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்ப பதிவு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459