வாட்ஸ் ஆப்பில் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா..உஷார்..! - ஆசிரியர் மலர்

Latest

10/05/2023

வாட்ஸ் ஆப்பில் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா..உஷார்..!

 Tamil_News_large_331609620230509140000

வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வெளிநாட்டு எண்களில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால், மோசடியாளர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு இருக்கலாமென்பதால், உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெரும்பாலான வாட்ஸ் ஆப் அழைப்புகள், எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற நாடுகளின் எண்ணில் இருந்து வருகின்றன. சர்வதேச எண் குறியீடுகளுடன் வந்தாலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் இணையம் வழியாக மேற்கொள்ளலாமென்பதால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அழைப்புகளை செய்யலாம். பல்வேறு நகரங்களில் வாட்ஸ் அப் அழைப்புகளுக்கு, சர்வதேச எண்களை விற்கும் ஏஜென்சிகள் உள்ளன.


இதுபோன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் மூலம் எதிர்முனையில் உள்ளவர்கள் வேலை அல்லது எளிதாக லாபம் ஈட்ட வாய்ப்பு என கூறலாம். ஆனால் இதன் முடிவில், நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வீர்கள்.


மோசடி பேர்வழிகள், வீட்டில் இருந்து வேலை செய்ய கூடிய எளிமையான பகுதி நேர வேலைவாய்ப்பு என கூறுகின்றனர். மோசடியில் சிக்க வைக்க முதலில் உங்களின் ஆசையை தூண்டுவார்கள். இதற்காக எளியவேலையை கொடுத்து சிறிய தொகையை அனுப்பி வைப்பர். இதனை நம்பி, வேலை செய்யும் போது உங்கள் விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுவர்.

மோசடி வலையில் சாதாரண நபர்கள் மட்டுமல்லாது தொழிலதிபர்களும் சிக்கி பணத்தை இழப்பது தொடர்கிறது. சமீபத்தில் பில்லியனரும், ஜீரோதா சி.இ.ஓவுமான நிதின் காமத், தனது நண்பர் வாட்ஸ் ஆப் மோசடியில் சிக்கி ரூ.5 லட்சத்தை இழந்தது பற்றி பகிர்ந்திருந்தார். டிவிட்டரில் ஏராளமானோர் இதுபோன்று வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப் அழைப்புகள் வருவதாக பகிர்ந்திருந்தனர்.


நெட்டிசன் ஒருவர், 'உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 3 முறை மிஸ்டு கால் வந்துள்ளதா. அனைத்து கால்களும் ஒரு முறை மட்டுமே ரிங் ஆகும். அந்த எண்ணின் புரோபைல் படத்தில் பெண்கள் முகம் இருக்கும். இதுபோன்ற அழைப்புகள் வருமாயின், மோசடி பேர்வழிகள் உங்களுக்கு வலைவிரிக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்' என பதிவிட்டிருந்தார்.


வாட்ஸ் ஆப் மோசடியில் இருந்து தப்பிக்க, ஒரே வழி மோசடி வாட்ஸ் ஆப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி, நாம் அவர்களை தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். இது தவிர, இதுபோன்ற வெளிநாட்டு எண் அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் அதனை உடனடியாக பிளாக் (Block) செய்ய வேண்டும்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459