ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குவதாக இருந்தது; நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருத்திய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பதவி நிலையிலேயே கவுன்சிலிங்கை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே பாணியில், உபரியாக உள்ள பணியாளர்களையும் இடமாறுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment