தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு - ஆசிரியர் மலர்

Latest

18/05/2023

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

 தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெற இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 போ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமையுடன் (மே 18) நிறைவடையவுள்ளது.

Join Telegram


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். மாநிலம் முழுவதுள்ள 7,738 தனியாா் பள்ளிகளில் சுமாா் 83 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன.


இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-இல் அமலான இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 3.98 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.


இந்தத நிலையில் வரும் கல்வியாண்டு (2023-2024) இலவச மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 போ் விண்ணப்பித்துள்ளனா்.


இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (மே 18) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள பெற்றோா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


அதன்படி, ஒரு பெற்றோா் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.


சோ்க்கை தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக் கல்வியின் உதவி மைய எண்ணுக்கு 14417 தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459