அரசு பள்ளியில் சேர 80,000 விண்ணப்பம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

24/05/2023

அரசு பள்ளியில் சேர 80,000 விண்ணப்பம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தகவல்

Tamil_News_large_3329161

''நடப்பாண்டில், 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.


நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே லாரன்ஸ் பள்ளியில், 'புதியன விரும்பு- - 2023' என்ற தலைப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை அமைச்சர் மகேஷ் பறை அடித்து துவக்கி வைத்தார்.


பின், அமைச்சர் கூறியதாவது:


மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி நடந்து வருகிறது.


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 'நபார்டு' நிதியின் கீழ் பள்ளி கட்டடங்கள் நவீன மயமாக்கப்படுகிறது.


குறிப்பாக, பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


நடப்பாண்டு, 80 ஆயிரம் மாணவ - மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்.


'புதியன விரும்பு- - -2023' என்ற தலைப்பிலான பயிற்சியில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட, 15 வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சிகளை இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.


கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை.


திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். தமிழக முதல்வர், அதில் ஏதும் மாற்றம் அறிவித்தால், கடைபிடிக்கப்படும்.


இவ்வாறு, அமைச்சர் கூறினார்.


பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, மாநில மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், கலெக்டர் அம்ரித் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459