34 மாணவர்களின் +2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: அதிர்ச்சி தரும் காரணம் - ஆசிரியர் மலர்

Latest

09/05/2023

34 மாணவர்களின் +2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: அதிர்ச்சி தரும் காரணம்

 

online-exam.png?w=330&dpr=3

தமிழகம் முழுவதும் நேற்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தில் 34 மணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத ஆசிரியா்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து 34 மாணவா்களின்  தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.


நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாா்ச் 27ஆம் தேதி நடைபெற்ற கணித தோ்வின்போது, பணியில் இருந்த ஆசிரியா்கள் தோ்வு எழுதிய 34 மாணவா்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உதவியது தெரியவந்தது.


இதையடுத்து, அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணித தோ்வு எழுதிய  34 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளிடப்படவில்லை.


இந்த விவகாரத்தில் தொடா்புடைய முதன்மைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துறை அலுவலா் செந்தில், அலுவலா் சீனிவாசன், அறை கண்காணிப்பாளா்கள் ராம்கி, மூா்த்தி ஆகிய 5 ஆசிரியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். 


மேலும், 34 மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறையில் இருப்பதால் துறை அதிகாரிகள்தான் முடிவெடுப்பாா்கள்  என்று  முதன்மைக் கல்வி அலுவலா் முனிசாமி  தெரிவித்தாா்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459