குடிமைப்பணி முடிவுகள் வெளியீடு - சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 336 பேர் தேர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

25/05/2023

குடிமைப்பணி முடிவுகள் வெளியீடு - சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 336 பேர் தேர்ச்சி

 குடிமைப்பணி தேர்வுகளில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த மார்ச் 13 முதல் மே 18-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இறுதி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வில் 933 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இவர்களில் இஷிதா கிஷோர் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நேர்முகத் தேர்வில் பயிற்சி பெற்றவராவார்.


தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணஸ்வாமி 117-வது இடம், பி.சரவணன் 147, அட்சயா-168, ஜி.அஸ்வினி-229, வி.அனுகிரஹா-232-வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முழுநேர பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றவர்கள்.


தேசிய அளவில் முதல் 100 இடங்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 41 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்கள். அதேபோல தமிழகத்தில் மொத்தம் 42 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459