பிளஸ் 2 தேர்வு: இன்று முதல் விடைத்தாள் நகல் விநியோகம் - ஆசிரியர் மலர்

Latest

30/05/2023

பிளஸ் 2 தேர்வு: இன்று முதல் விடைத்தாள் நகல் விநியோகம்

 

998809

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படுகிறது.


இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Join Telegramஇதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை (மே 31) முதல் ஜூன் 3-ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459