பிஎட், எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.சி.நாகசுப்பிரமணி அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் வகுப்புகளுக்கு 4-வது பருவத்துக்கான வகுப்புகள் மே 11-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைகின்றன. மே 12 முதல் பருவ விடுமுறை விடப்படுகிறது.
4-வது பருவத்துக்கான (இறுதிபருவம்) எழுத்துத் தேர்வுகளை ஜூன் மாதம் 2-வது வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இறுதி பருவத் தேர்வுக்கான விரிவானகால அட்டவணை பல்கலைக்கழக தேர்வுத் துறையால் விரைவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment