நீட் தேர்வு 2023 - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர் மலர்

Latest

06/05/2023

நீட் தேர்வு 2023 - வழிகாட்டு நெறிமுறைகள்

 .com/

இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG 2023) மே 7ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும் (485 நகரங்கள்) வெளிநாட்டிலும் (14 நகரங்கள்) எழுதுகின்றனர்.Join Telegram


பேனா மற்றும் பேப்பர் (PBT) முறையில் தேர்வு நடக்கும்.


நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள்


மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.


மாணவர்களுக்கான ஆடை மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் என்னவென்று பார்போம்.


தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது. 


உடை கட்டுப்பாடு : பெண்கள்


முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் அணியக் கூடாது. துப்பட்டா அணியக் கூடாது. பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணிதல் கூடாது. 


கால்களை மூடு விதமான செருப்பு மற்றும் ஷூக்களை அணியக்கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். 


நகைகள், காப்பு அணியக்கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.


தலைமுடியில் பின்னல் மற்றும் கொண்டை கூடாது (தலைவிரி கோலமாக போக வேண்டும்)


“தேசிய தேர்வு ஆணையம் (NTA) கலாச்சாரத்தின் புனிதத்தை மதிக்கிறது. குறிப்பாக மாணவிகள் தேர்வு மையங்களுக்கு மதசார் உடைகளை அணிந்து வந்தால் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.  தேர்வு அறைக்குள் கலாச்சார மற்றும் மத ரீதியான உடைகளை அணிந்து வருபவர்கள் குறைந்தது  ஒரு மணிநேரத்திற்கு முன்பே தேர்வு எழுதும் மையத்துக்கு வந்து விடவேண்டும். முறையான சோதனைக்கு பின்பே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 


பொது கட்டுப்பாடு: குளிர் கண்ணாடி, கைக்கடிகாரம், காப்பு ஆகியவை அணிந்து வரக்கூடாது. பேனா, ஸ்கேல், எழுதுவதற்கு அட்டை, ரப்பர், கால்குலேட்டர் ஆகியவற்றையும் எடுத்து வரக்கூடாது.  


தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


உணவு கட்டுப்பாடு:


சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் தங்களுக்கான மருந்தினை எடுத்து வரலாம். சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஆப்பிள், போன்ற பழங்களையும் கொண்டு வரலாம். பேக்செய்யப்பட்ட உணவுகள், சாக்லேட்களுக்கு அனுமதியில்லை. 


ஆவன கட்டுப்பாடு :


இரண்டு பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ, அசல் ஆதார் அட்டை மற்றும் நுழைவு சீட்டு (Admit card) மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். நுழைவு சீட்டில் புகைப்படம் ஒட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு மைய பகுதியில் கோவிட் தொற்று பயம் இருந்தால் தேர்வு எழுதுபவர், ஒரு தண்ணீர் பாட்டில், சிறிய சானிடைசர் பாட்டில், முக்கவசம் மற்றும் கைஉறைகள் உள்ளே எடுத்து செல்லலாம்.


நேரம்:


இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 


தேர்வு மையத்துக்கு அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ள ரிப்போர்டிங் டைம்மில் வந்துவிடவேண்டும்.


மையத்தினுல் நுழைவதற்கு கடைசி கால அவகாசம் 1:30pm. (Gate closing time 1:30pm, after that no body is allowed to enter or leave the Centre until 5pm)

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459